அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow 'பாரிஸ் கதைகள்' நூல் வெளியீடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'பாரிஸ் கதைகள்' நூல் வெளியீடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -கதிர்தீபன்  
Tuesday, 26 October 2004

அப்பால் தமிழ் குழுமத்தின் நூல் வெளியீட்டு தொடரில் சிறுகதைத் தொகுப்பு நூலான 'பாரிஸ் கதைகள்'   பாரிசில் சிறப்புற வெளியிடப்பட்டது.  கடந்த 22-10-2004 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அப்பால் தமிழ் குழுமத்தினரின் உள்ளகச் சந்திப்பின்போது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.கா.வே. பாலகுமாரன் இந் நூலை வெளியிட்டு வைத்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் பிரான்சுக்கு வருகை தந்த பாலகுமாரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வகையில் இந்த உள்ளகச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பால் தமிழ் குழுமத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள்  குறிப்பாக திரு.இரவீந்திரன், திருமதி. சிவரஞ்சினி, திரு.நல்லையா, திரு.வின்சார்ள்ஸ், திரு.நவநீதன், திரு.நுகேஷ்வரன், திரு.கதிர்தீபன், திருமதி.சுமத்திரி, தளநெறியாளர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதில் சிறப்புரையாற்றிய கா.வே.பாலகுமாரன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இலக்கியம் சிறந்த பணியாற்றுகின்றதென குறிப்பிட்ட அவர் புலம்பெயர் வாழ்வின் மறைபாகத்தை இக்கதைகள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் புகழ்ந்துரைத்தார். தன் நண்பர்களில் ஒருவரான நல்லையா கதை எழுதியிருப்பதை காணும் போது புலம் பெயர் வாழ்க்கை தரும் வலியினை உணரமுடிவதாகவும் சுட்டிக்காட்டினார். நூலின் முதல் பிரதியை கிறிஸ்ரி பெற்றுக்கொண்டார்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Apr 2024 14:33
TamilNet
HASH(0x563fdfb7be80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Apr 2024 14:40


புதினம்
Tue, 16 Apr 2024 14:40
















     இதுவரை:  24772521 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1951 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com