அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 19 arrow ஒரு நெடுந்தெருவும் ஓர் அதிகாலையும்....!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு நெடுந்தெருவும் ஓர் அதிகாலையும்....!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 01 August 2005

கிழக்கு மேற்காக
நீண்டு விரிகின்றது
அக்கரிய நெடுந்தெரு
நிழற்குடைச் சாலையாய்.
அணி நடைப் புரவிகளும்
காலாட் படையினரும்
இருள் தேசத்து வேலையாட்களும்
பதித்த தடங்கள் வெளித்தெரியாமல்
புரண்டு கிடக்கின்றதோ தெருவின் முதுகு.
ஒளி பரவும் முன்னர்
தினமும் கழுவப்படுகிறது நீரால்.
எந்தப் பாவ அழுக்குகளை
இந்த நீர் கழுவுகின்றதோ.
யார் அறிவார்?
இந்த குளிர்கால அதிகாலையிலும்
காமம் தரும் கதகதப்பின் மிதப்பில்
அணைத்தபடியும்
இதழ்களை நனைத்தபடியும்
அருந்தலாய்
உலாப்போகும் இருபாலார்.
பின்னிரவு வரையில்
உலகெங்குமான உல்லாசிகளால்
கும்மாளமடிபட்ட உலாத்தெரு இது.


இராவேலை
முடித்த களைப்புடனே
அந்நெடுந் தெருவில்
இறங்கி நான் நடக்கிறேன்.
என்னை எதிர்கொள்கிறாள்
வெற்றிடத்தை நிரப்பப்போகும்
மாலி தேசத்து கருங்கற்சிலை.
கன்னங்களில் ஒத்தடமிடும்
முகமன் கூறுகையில்
அவள் செவிவழியே பாய்கின்ற
அலி பார்கா தூரேயின்
நரம்பிசைப் பாடல்
என்னுள்ளும் இறங்குகின்றது.
'ஏய்.. குளிருடன் விளையாடுகிறாயா'
திறந்து கிடக்கும் என் மேலங்கியை
சரி செய்ய நீள்கின்றது
அவளின் வெண்டைக்காய் விரல்கள்.
'குளிருடன்தானே..'
சொற்களில் காதலைத் தடவினேன்
காமம் ஒளிர..
நாணிச் சிலிர்த்தன அவள் விழிகள்
'வெள்ளிக்கிழமை நினைப்பாடா உனக்கு..'
என் கன்னத்தில் கிள்ளியபடி
பணியிடம் நோக்கி நகருகின்றாள்
தண்ணென்றிருக்கின்றது
சூடேறிய எந்தன் உடல் தீண்டும்
பனிக்குளிர்.

புற்றீசல்களென
சுரங்கத்தால் மேலேறி
என்னைக் கடக்கின்றனர்
தூக்கக் கலக்கத்துடன் எம்மவர்.
பரபரப்பற்ற அந்நெடுந் தெருவில்
துலக்கமாய்த் தெரிகின்றனர்
இந்த அதிகாலைத் துப்பரவாளர்கள்.
பருத்த உடலும்
பின்னிக்கட்டிய சிலும்பல் மயிருமாய்
வாத்துகள் அசைவதுபோல்
நம்மூர் பெண்கள்.
தூசு துடைத்து கழிவகற்றி
கண்ணாடி தொட்டு கழிப்பறை மினுக்கி
காலைப்பொழுதை காசாக்கி மீள்வர்
சாதியச் செருக்கும் வக்கரிப்பும்
கொப்பளிக்கும் உரையாடலுடன்.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை
எழுதிச் சென்ற
இந்த குளிர்வலையத் தெருவில்
கிழக்கிருந்து வந்து கூசாமல் நடந்திடும்
இந்த பாழாய்ப்போனவர்களின்  மனங்களை
எதனைக் கொண்டு கழுவுவது..

அந்த நெடுந்தெரு நீங்கி
சுரங்கத்துள் இறங்குகிறேன்.


14-06-2005

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 22:00
TamilNet
HASH(0x5650ab046d38)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 22:00


புதினம்
Thu, 25 Apr 2024 22:00
















     இதுவரை:  24806589 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3934 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com