அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow கறுப்பு இலக்கியத்தின் கலாச்சார பின்னணி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கறுப்பு இலக்கியத்தின் கலாச்சார பின்னணி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆங்கிலத்தில் - செனதொரதெனிய  
Tuesday, 06 July 2004
பக்கம் 1 of 2

 à®¤à®®à®¿à®´à®¿à®²à¯ - திருவேணிசங்கமம்

(இக்கட்டுரை திருக்கோணமலையில் இருந்து வெளிவரும் சுட்டும்விழி-3 இதழில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)

ஆபிரிக்க இலக்கியம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தை செய்வது சிரமமானதும் சவாலானதுமாகும்.  ஒரு தனிநாட்டுக்குரிய ருஸ்ய, பிரெஞ்சு, சீன, இந்திய, ஐப்பானிய இலக்கியத்தைப் போலல்லாது ஆபிரிக்க இலக்கியம் மிகப்பரந்த புவியியல் பரப்பை ஒரு கண்டத்தை அடிப்படையாகக் கொண்டது. கரிபியன் இலக்கியமும் லத்தீன் அமெரிக்க இலக்கியமுமே அவ்வாறான மிகப் பரந்த புவியியற் நிலப்பரப்பைக் கொண்டன. ஆபிரிக்க இலக்கியத்தின் விரிந்த தன்மையை அக்கண்டத்திலுள்ள நாடுகளின் தொகையைக் கொண்டும். ஆபிரிக்காவிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும், ஆபிரிக்க இலக்கியங்களை வெளியிடுதலை பிரதானமாகக் கொண்ட ஏகப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களைக் கொண்டும் அவைகளால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நூல்களின் பெருந்தொகையைக் கொண்டும் ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். ஆபிரிக்க எழுத்தாளர்கள் காலனி ஆதிக்கவாதிகளின் மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கீசு ஆகியவற்றிலும் ஆபிரிக்கன் அரபு மற்றும் சுதேசிய மொழிகளிலும் எழுதுகின்றனர். காலணி ஆதிக்கவாதிகள் தமது வளத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில்  ஆபிரிக்காவைப் பல நிலப்பகுதிகளாகப் பிரித்தனர். காலனித்துவ மொழிகளின் இலக்கியப் பிரயோகம் இதனை பிரதிபலிக்கின்றது. நாங்கள் மேலே போவதற்கு முன் நமது நாட்டில் பரவியிருக்கும் தப்பபிப்ராயத்தை நீக்கிக்கொள்வது இன்னும் தெளிவை ஏற்படுத்தும்.

சில விமர்சகர்கள் சொல்வது போல் ஆபிரிக்க இலக்கியம், நைஜீரிய இலக்கியம் அல்ல. நைஜீரிய இலக்கியம் ஆபிரிக்க இலக்கியத்தில் ஒரு பகுதியாகும். நமது வாசகர்களுக்கு பரிட்சயமான சின்னுவே அச்சுபே, கூகி தியாங்கோ மற்றும் தென்னாபிரிக்க கவிஞர்களினதும் நாடக ஆசிரியர்களினதும் எழுத்துக்கள் மாத்திரம் அல்ல, அது மேற்கு ஆபிரிக்காவில் ஆங்கிலத்தில் படைக்கப்படும் இலக்கியம் மாத்திரம் அல்ல கிழக்கு ஆபிரிக்காவிலும் தென் ஆபிரிக்காவில் உள்ள எழுத்தாளர்கள் தங்களது இலக்கிய வெளிப்பாட்டிற்கு ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் இது ஆங்கில இலக்கியத்தின் பகுதியல்ல அல்லது சில விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் அது ஆங்கில இலக்கியத்தின் நீட்சியுமல்ல. ஆபிரிக்க எழுத்துக்கள் சில கல்விமான்கள் வரையறை செய்வதுபோல் கொமன்வெல்த் இலக்கியத்;தின்  ஒரு கூறல்ல. அல்லது ஆங்கிலத்தின் புதிய இலக்கியமோ அதன் 20ம் நூற்றாண்டு இலக்கியமோ அல்லது அதன் பிரிவோ அல்ல. பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் தனித்துவமான பங்களிப்பை செய்தமைக்காக செங்கோர் பிரெஞ்சு அக்கடமியினால் கௌரவிக்கப்பட்டார். இது ஆபிரிக்க இலக்கியத்தை ஐரோப்பிய இலக்கியத்துடன் இணைக்கும் முயற்சியாகும். ஆபிரிக்க இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம் ஆபிரிக்கத்தன்மை என்பவற்றை விளங்கிக் கொள்ளாமையின் வெளிப்பாடாகும்.  வோல்சொயிங்காவிற்கு பிறகு இரு நோபல் பரிசுக்குரியவர்களை ஆபிரிக்கா கண்டுள்ளது. 1958ல் அதைப் பெற்ற நாகிப்மா பௌஸ் அப்பரிசு பெறும் முதல் எழுத்தாளருமாவார். பொஸ்ட் வானாவில் வாழும் ஐரோப்பிய வம்சாவழியைச் சார்ந்த நாடின் கோடிமர் 1991 ல் பெருமைக்குரிய அப்பரிசை வென்றார்.


(02)

ஆபிரிக்க பின்னணியை நிச்சயமாகக் கொண்ட அல்லது அதன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு எழுத்துக்கள் ஆபிரிக்க இலக்கியம் என 1962ல் சியாராஷயொன் போராபெயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் வரையறை செய்யப்பட்டது. மொத்த ஆபிரிக்காவின் தேசியங்களினதும் மற்றும் இனம்களினதும் இலக்கியம் ஆபிரிக்க இலக்கியமாகும்- என அச்சுபே வரையறை செய்கிறார். ஒரு தேசிய இலக்கியம் என்பது இனக்குழுக்களிடையே நிலவும் அல்லது இனக்குழு மொழியில் மாத்திரம் உருவாவதாகும். அச்சுபே நைஜீரியாவை உதாரணம் காட்டுகையில் அங்கு ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியம் தேசிய இலக்கியம் என்றும் கூஷா, இப்போ, யோருபா, எலிக், இடோ, இயோ ஆகிய மொழிகளில் எழுதப்படுவது இனக்குழு இலக்கியம் என்றும் குறிப்பிடுகிறார். ஐரோப்பிய மொழிகளை இலக்கியப் படைப்பிற்கு பயன்படுத்துவதை கண்;டிக்கும் கூகி அவை கலப்புப் பாரம்பரியம் என்று சொல்லத்தக்க ஆப்ரோ யூரோப்பியன் (Afro - European) மரபை உருவாக்கியுள்ளன என்கிறார். காலனித்துவ காலகட்டத்தில் ஆபிரிக்கர்களால் ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவ்வாறானவை ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கீசு மொழிகளில் எழுதப்பட்டமையால் அவை முறையே ஆங்கிலோ - ஆபிரிக்கன் இலக்கியம், லஸ்ரோ - ஆபிரிக்கன் இலக்கியம் என அழைக்கப்பட்டன. ஆபிரிக்க இலக்கியம் ஆபிரிக்க மொழிகளில் மாத்திரம் சிருஸ்டிக்கப்படுவதாகும் அவைதான் ஆபிரிக்க குடியானவர் தொழிலாளி வகுப்பினர்களின் மொழிகளாகும் என்று கூகி கூறுகிறார். ஆனால் குடியானவர்கள் மொழியில் எழுதப்படும் படைப்புகள் கணக்கெடுக்கப்படாமல் போகும் ஆபத்துள்ளது. 1977ல் கூகி சிக்குயி மொழியில் எழுதத் தொடங்கினார். அவர் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறார். நான் விரும்பியபோது கல்யாணம் செய்வேன் என்ற நாடகம் சிலுவையில் தொங்கும் சாத்தான், மிற்றிக்கறி என்னும் நாவல்கள் அவரது அம்மா எனக்காகப் பாடினாள் என்ற இசை நாடகம் ஆகிய படைப்புக்கள் அவராலேயே ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு காரணமாகவே கூகியின் படைப்புக்கள் கூட மிக விரிவான வாசக மட்டத்தை இலங்கை உள்ளிட அடைந்தது. ஆபிரிக்க


மொழிகளில் எழுதி புரட்சிகரமான ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் குடியானவர்கள் மத்தியில் விதைக்கும் ஒரு எழுத்தாளர் தேசத்துரோகியாகக் கருதப்பட்டு சிறைக்கோ, அஞ்சாதவாசதிற்கோ, மரணதண்டனைக்கோ உள்ளாகும் நிலை ஆபிரிக்காவில் உள்ளது. கூகியும் எந்தவிதமான குற்றச்சாட்டுமில்லாமல் சிறையில் தள்ளப்டடார். சொய்ங்கா நைஜீரியாவில் உள்நாட்டுக்கலவரம் நிகழ்ந்தபோது இந்த நிலமையை எதிர் கொண்டார். கூகி பின்னர் மாறுவேடத்தில் கென்யாவைவிட்டு வெளியேறினார். ஆபிரிக்க எழுத்தாளர்களில் கூகியும் சொய்ங்காவும் மாத்திரம் இந்த ஆபத்துக்களை எதிர் கொண்டவர்கள் இல்லை. சிறை எழுத்துக்களும் நாடுகடத்தப்ட்டவர்களின் படைப்புக்களும் ஆபரிக்க இலக்கியத்தில் தூக்கலாகத் தெரியும் அம்சங்களாகும்.

நாங்கள் ஆபிரிக்க இலக்கியத்தை காலணித்து வாதிகளின் மொழிகளில் எழுதப்பட்டதாலேயே அறிகிறோhம். பிரெஞ்சு போர்த்துக்கீசு மொழிகளில் எழுதப்பட்ட ஆபிரிக்க இலக்கியங்களைக்கூட ஆங்கில மொழி பெயர்ப்பினூடாகவே எம்மால் அறிய முடிகிறது. இந்த வகையில் நிக்குயி மொழியில் எழுதப்பட்ட கூகியின் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் எங்களின் கைகளில் தவழ்கின்றன. ஆபிரிக்கா உலகிற்கு வழங்கும் நன்கொடையில் இலக்கியமும் பெறுமதிமிக்க பகுதியாகும். உலகமும் இதனை உவப்புடன் ஏற்றுக்கொள்கிறது என்று குறிப்பிடத்தக்க ஆபிரிக்க இலக்கிய விமர்சகராகவும், சீயாராஸியோன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப்பிரிவின் பேராசிரியராகவும் உள்ள எல்ரட் குரோஷிமியோன்ஸ் கூறுகிறார். ஆபிரிக்காவில் 750 மொழிகள்வரை உள்ளன. நைஜீரியாவில் மாத்திரம் 400 மொழிகள் வழக்கில் உண்டு. கிட்டத்தட்ட எல்லா இனக்குழு மொழிகளிலும் செழிப்பான வழக்காறுகள் இருந்தபோதிலும் நவீன இலக்கிய வெளிப்பாட்டிற்கு தக்கவண்ணம் அவை இன்னும் விருத்தியுறவில்லை. அவைகளில் பலவற்றிற்கு வரி வடிவம் கூட இல்லை.

நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் தற்போது மொழித்துறை பேராசிரியராகவும் அவைக்காற்றுக்கலைகள் மற்றும் ஒப்பீட்டுக்கற்கை துறைகளின் பேராசிரியராகவும் உள்ள கூகி ஆபிரிக்க எழுத்துக்கள் ஆபிரிக்காவிற்கான பொதுவான பாரம்பரியத்தை நெருங்கியுள்ளதாக கூறுகின்றார். பொதுவான பாரம்பரியம் என்றால் என்ன? காலனித்துவ ஆட்சிக்கு எதிரான தேசிய எழுச்சி போராட்டங்களின் பின்னர். வெளிப்பட்ட ஒன்றாக ஆபிரிக்க இயக்கங்கள் உள்ளன. இந்த இலக்கிய எழுச்சி முதலில் பிரெஞ்சு மொழி வழங்கும் மேற்கு ஆபிரிக்காவின் கமறூன், செனகால், கினியா ஆகிய இடங்களில் வெளிப்பட்டது. பின்னர்தான் மேற்கு ஆபிரிக்காவின் ஆங்கில மொழிவழங்கும் நைஜீரியா, கானா போன்ற இடங்களிலும் காணப்பட்டது.  ஆசியா மற்றும் இலத்தின் அமெரிக்காவில் நடந்ததுபோல் காலனித்துவம் ஆபிரிக்காவின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தியது. அதன் கலாச்சாரத்தையும், கௌரவத்தையும் இழிவுபடுத்தியது. -ஆபிரிக்க பழங்குடி என்பது காலனித்துவத்தின் கற்பிதமாகும். கலாசார மேம்பாடு, நாகரிகமாக்கல் என்ற காலனிய செயற்பாடுகள் பாரம்பரிய ஆபிரிக்க கலாச்சாரத்தின் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டவைகளாகும்.   காலனியவாதிகள் தமது நடவடிக்கைகள் -பழங்குடியினரை பண்படுத்தி கிறிஸ்தவர்களாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நியாயப்படுத்தினர். தான் நீக்குரோவைவிட காட்டுமிராண்டியாக இருப்பதை உணர்ந்த  வெள்ளையன் அதை மறைக்க நீக்குரோவை காட்டுமிராண்டி என அழைத்தான் என்று, மடகஸ்காரைச் சேர்ந்த கவிஞர் யாக்குயிஸ் ஏபமஞ்சரா பாடுகிறார். தேசிய இயக்கங்கள் காலனித்துவ  ஆக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தன. அவைகள் சுதேசிய கலாச்சாரத்தையும், அதை மீளுருவாக்கம் செய்த கலை இலக்கிய உணர்வையும், தேசிய எழுச்சியையும் ஊக்குவித்தன. உண்மையில் தனித்துவம் மிக்க கலாச்சாரத்தை ஆபிரிக்கா கொண்டிருந்தது. அதனை அடிமை வர்த்தகமும் காலனித்துவமும் அழித்துவிட்டது. என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.

 





மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 10:20
TamilNet
HASH(0x55d5b974c098)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 10:20


புதினம்
Fri, 29 Mar 2024 10:20
















     இதுவரை:  24715949 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4414 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com