அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 22 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 43 arrow எதுவுமே சொல்ல வேணடாம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எதுவுமே சொல்ல வேணடாம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தஞ்சா  
Saturday, 15 March 2008

தஞ்சா சுகுமாரன்தஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில்  பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன்.
தஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின்  பெயர்த்தி.

துணிவைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் என்னிடம் அது இல்லை

காதலைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் நான் அதைத்
தொலைத்து விட்டேன்

நட்பைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் எனக்கு அது தேவையிலலை

உண்மையை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் அதைத் தாங்கும்
வலிமை எனக்கு இல்லை

நம்பிக்கையைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் என்னிடம் அது
இறந்துபோய் விட்டது

அறிவைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் அது நிறையவே
என்னிடம் உள்ளது

விசுவாசத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் எனக்கு அப்பாற்பட்டது அது

ஒளியைப் பற்றி என்னிடம
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் நான் இருளில் இருக்கிறேன்

வலியைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் நான் வலியற்றவள்

துயரத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் இரவும் பகலும்
நான் அதனுடனேயே வாழ்கிறேன்

கோபத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் அது ஒருபோதும்
தீரப்போவதில்லை

உன்னைப் பற்றி எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் உன்மேல் எனக்கு
எந்த ஆர்வமும் இல்லை

என்னைப் பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் என்னை உனக்கு தெரியாது

நன்றி: புதியபார்வை

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 22 Sep 2023 07:28
TamilNet
HASH(0x55d9013b2378)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 22 Sep 2023 07:59


புதினம்
Fri, 22 Sep 2023 07:28
















     இதுவரை:  24039563 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4257 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com