அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குறும்படம் பார்க்க!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளைஞன்  
Saturday, 24 July 2004

அப்பால் தமிழ் இணையத்தளத்தில் சலனம் என்கின்ற பகுதியூடாக நாம் நம்மவர் படைப்புக்களான குறும்படங்களை ஒளிபரப்புகிறோம். எம்மில் சிலர் வேகமான இணைய இணைப்பையும், சிலர் மெதுவான இணைய இணைப்பையும் கொண்டுள்ளோம். எனவே நமது தளத்தில் இணைக்கப்படும் குறும்படங்களை, வேக இணைப்பு உள்ளோர் "Online" இலேயே படத்தைப் பார்க்க முடியும்.  ஆனால் வேகம் குறைவான இணைய இணைப்பை உடையோர்க்கு அது அவ்வளவாக சாத்தியப்படாது. அதேபோல சிலநேரங்களில் நாம் பயன்படுத்தும் இணைய வழங்கியின் வேகத்தின் காரணமாக (உதாரணமாக ஒரே நேரத்தில் பலர் பார்க்க முற்படும்போதோ) வேக இணைப்பு உள்ளவர்களுக்கும் கூட குறும்படங்களைப் பார்வையிடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே இந்தத் தொழில்நுட்ப வசதியின்மையை நிவர்த்திசெய்வதற்கு நாம் உங்களுக்கு வழங்கும் யோசனை இதுதான். வேக இணைப்பு இல்லாதவர்களோ, அல்லது வேக இணைப்பு இருந்தும் சில காரணங்களால் Online இல் குறும்படத்தைப் பார்க்க முடியாதவர்களோ, நாம் இங்கு இணைக்கும் குறும்படங்களை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துவிட்டுப் பாருங்கள்.

அந்தவகையில் வேக இணைப்பு இல்லாதவர்கள் (56 kb Modem பயன்படுத்துபவர்கள்) ஒரேயடியாக முழுப்படத்தையும் தரவிறக்கம் செய்யமுடியாது போகலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நாம் இங்கு வழங்கும் உதவிக்குறிப்பைப் பின்பற்றி, குறும்படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக (உதாரணமாக இன்று சிறு அளவையும், நாளை சிறு அளவையும்) உங்கள் கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம். (இதனை வேக இணைப்பு உள்ளவர்களும் பின்பற்றலாம்). ***முழுப்படத்தையும் தரவிறக்கி முடித்த பின்னரே படது்தைப் பார்வையிடமுடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.

நாம் இங்கே உங்களுக்கு முன்மொழிவது Download Accelerator Plus என்னும் இலவசமான தரவிறக்கி.

1. Download Accelerator Plus என்னும் இலவசமான தரவிறக்கியை இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

2. தரவிறக்கிய அந்த செயலியை(software) உங்கள் கணினியில் இயங்கச் செய்யுங்கள்.

3. அதன்பின், கீழே படத்தில் காண்பதுபோல் Add url என்பதைச் சொடுக்கவும்.

Add Url என்பதை அழுத்துக

4. அப்போது, கீழே படத்தில் காண்போது போன்று ஒன்று திரையில் தோன்றும். அதில் நமது குறும்படங்களின் முகவரியைக் பிரதியெடுத்து(copy) அப்பெட்டிக்குள் இடவும் (paste). அதன்பின் அருகில் இருக்கும் OK என்பதைச் சொடுக்கவும். 

குறும்படத்தின் முகவரியை இந்தப் பெட்டிக்குள் இடவும். பின் OK என்பதை அழுத்தவும்.

வேகம் கூடிய இணைப்பு என்றால் சில நிமிடங்களில் உங்கள் கணினியில் குறும்படம் சேமிக்கப்பட்டுவிடும். வேகம் குறைந்த இணைப்பு என்றால் சற்றே அதிகம் நேரம் பிடிக்கலாம். அப்படிப் பொறுத்திருக்க நேரமில்லை எனின்,

5. கீழே படத்தில் காண்பது போன்று Pause என்பதை அழுத்தித் தற்காலிகமாக தரவிறக்குவதை நிறுத்திவிடலாம்.

Pause என்பதை அழுத்தித் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மிகுதியை நாளை தொடரலாம்.

6. கணினியை நிறுத்திவிட்டு, மீண்டும் நாளை மிகுதியை கிழே படத்தில் காண்பதுபோன்று Resume என்பதை அழுத்தி தரவிறக்கிக் கொள்ளலாம்.

Resume என்பதை அழுத்தி மிகுதியைத் தரவிறக்கிக் கொள்க.

7. தரவிறக்கிய குறும்படத்தை உங்கள் கணினியில் உள்ள Windows Media Player இன் மூலம் பார்வையிடலாம்.

இந்த முறையைப் பின்பற்றி குறும்படங்களை அனைவரும் பார்த்து மகிழுங்கள். தரவிறக்கம் செய்வதிலோ அல்லது குறும்படங்களைப் பார்ப்பதிலோ பிரச்சினைகள் ஏற்படின் ilaignan@appaal-tamil.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.


     இதுவரை:  25658795 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6891 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com