அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 5 arrow தமிழிசை பற்றிய புரிதலும் ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழிசை பற்றிய புரிதலும் ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -ராஐ ஸ்ரீகாந்தன்-  
Wednesday, 14 July 2004

(இக்கட்டுரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாகிய ஓலை இதழிலிருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)


தமிழர்களில் பெரும்பாலானோர் கர்நாடக இசையே தமிழிசை என்ற தவறான புரிதலுடன் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். பாடசாலை முதற்கொண்டு பல்கலைக்கழகம் வரை கர்நாடக இசையே தமிழர்களின் இசைவடிவமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை கலாச்சார அமைச்சின் கீழுள்ள கலைக்கழகத்திலும் தமிழர்களின் இசையாக கர்நாடக இசையே கொள்ளப்படுகிறது. தமிழிசை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்கு அறியத்தந்த நமது சுவாமி விபுலானந்தரின் பெயர் சூட்டப்பட்ட விபுலானந்த இசைநடனக் கல்லு}ரியிற் கூட கர்நாடக இசையே பயிற்று மொழியாக உள்ளது. அற்புதமான தமிழிசையை அகிலத்திற்குத் தந்த தமிழ்நாட்டிற்கூட கடந்த மூன்று நு}ற்றாண்டு காலமாக தமிழிசை முழுமையான அங்கீகாரத்தைப் பெறவில்லை. பல்மொழி பேசுகின்ற பல்கலாச்சார தொன்மங்களைக் கொண்டுள்ள இந்திய தேசத்திலும் அரசியல் அதிகாரத்துவமே கலைகளின் இருப்பினையும் அவற்றின் பரிணாம வளர்ச்சினையும் தீர்மானித்துள்ளது.
உலகில் வேறெந்த இனத்திற்கும் இல்லாத இசையுறவு தமிழினத்திற்குள்ளது. தாயின் வயிற்றிற் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் வந்துதித்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து குழந்தைப் பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல், காதற்பாடல் என்ற தொடர்ந்து உயிர்பிரிந்த பின்னர் ஒப்பாரிப்பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்கும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்;ள தனித்துவமான இசை அடையாளம்.
தென்னிந்திய மாநிலங்களிலும் தமிழ்மக்கள் செறிந்து வாழும் ஏனைய நாடுகளிலும் இன்று செழிப்புற்றுத் திகழும் மூன்ற நு}ற்றாண்டு வயதுகொண்ட 'கர்நாடக இசை" என்ற பெயர்கொண்ட இசை வடிவத்தின் தாய், தமிழிசையே என்பதும் இத்தமிழிசை மூவாயிரம் ஆண்டிற்கு மேலான வரலாற்றுத் தொன்மையைக் கொண்டிருந்தது என்பதும் இசை ஆய்வாளர்களின் ஒருமித்த முடிவாகும். முறையான இசை ஆய்வுகளை மேற்கொண்டு 'கர்ணாமிருத சாகரம்" என்ற ஆய்வு நு}லை எழுதி 1917ஆம் ஆண்டில் இந்நு}லை அச்சிடுவதற்கென்றே ஓர் அச்சகத்தை நிறுவிய ஆபிரகாம் பண்டிதர் முதற்கொண்டு உலகின் முதல் தமிழ் பேராசிரியரான விபுலானந்தர் வரை இவற்றை தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
1928ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சார்ந்த ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ் பேராசிரியரான விபுலானந்தரால் 1933இல் தமிழிசையை மீட்டெடுக்க விதைக்கப்ட்ட முதல் வித்து, மூன்றாண்டுகளின் பின்னர் தமிழிசை இயக்கமாக முதற் துளிர்விட்டது. அண்ணாமலை அரசரால் உருவாக்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கு ராஐhஐp, கல்கி, டீகேசி, போன்றவர்கள் ஆதரவாகத் தொழிற்பட்டார்கள்.
சுவாமி விபுலானந்தர் 1936இல் சென்னை பல்கலைக்கழக செனற் அரங்கில் தமிழர்இசை, சிற்பம், நாடகம் என்பபைபற்றி ஆங்கிலத்தில் நிகழ்த்திய பேருரைகள் புதியதொரு விழிப்புணர்வை அறிஞர்கள் மத்தியில் ஏற்படுத்தின. தமிழர் இசைபற்றி எழுதிய 'யாழ் நு}ல்" 1947இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
தமிழர்களின் கலை, கலாச்சார, வாழ்வியல் தொன்மங்கள் தமிழ் இலக்கியங்களிலேயே பொதிந்துவைக்கப்பட்டுள்ளன. தமிழிசை பற்றிய மிக விரிவான செய்திகள் தொல்காப்பியத்தில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தின் அடியார்க்கு நல்லார் உரையில் விரிவான தகவல்கள் பேசப்பட்டிருக்கின்றன. பல தமிழிசை பற்றிய குறிப்புகள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அடியார்க்கு நல்லார் பதினோராம் நு}ற்றாண்டில் வாழ்ந்தவர். 'யாப்பருங்கலம்" என்ற யாப்பு நு}லுக்கு எழுதிய குறிப்பிலும் தமிழிசை, ஆடல், பாடல் என்பவை குறித்த மிக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு உச்ச நிலையிலிருந்த தமிழிசை மரபு எங்கே தொலைகிறது என்று நோக்கினால் அங்கே வருகின்றது கர்நாடக இசை. தமிழிசை வரலாறு இங்கே துண்டிக்கப்படுகின்றது.
14ஆம் நு}ற்றாண்டில் அலாவுதின் கில்ஐpயின் படைத்தளபதி மாலிக்கபூர் தென்னாட்டின் மீது படையெடுத்தார். பாண்டிய, கோசல, யாதவ, காகதீய, அரசுகள் மாலிக்கபூரினால் கைப்பற்றப்பபட்டன. முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இந்துக்களைக் காக்க பல்லாரி மாவட்டத்தில் விஐயநகர அரசு உதயமானது. கர்நாடகரும் ஆந்திரரும் தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்தனர். 15ஆம் நு}ற்றாண்டு முதற்கொண்டு தமிழ்ப் பெருநிலம் தெலுங்கு மன்னரின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டது. 17ஆம் நு}ற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவரான புரந்தரதாசர் மிகுந்த செல்வமும் அரச செல்வாக்கும் கொண்டிருந்தார். சங்கீதத்தில் அதீத ஈடுபாட்டினைக் கொண்டிருந்த இவர் தமிழிசை நுட்பங்களைச் சிறப்பாக கற்றுத்தேர்ந்தவரென்று கூறப்படுகின்றது. இவரே கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்றும் ஆதிகுரு என்றும் அழைக்கப்படுகின்றார். இந்நு}ற்றாண்டின் பிற்பகுதிலேயே சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகக் கொள்ளப்படும் சியாமா சாஸ்திரிகள் (1762-1827), தியாகராஐ சுவாமிகள்(1767-1847), முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் தோன்றினார்கள். இவர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் தியாகராஐ சுவாமிகள், தமிழ்ப்பண்ணிசை ஒலித்துக்கொண்டிருந்த திருவாரூரில் 1767மே மாதம் 4ஆம் திகதி பிறந்தார். கொண்டி வெங்கடரமணய்யாவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றுத் தேர்ந்தார்.
தென்னகத்தை ஆட்சிபுரிந்த விஐயநாயக்க மன்னர்கள் கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு பூரண ஆதரவ வழங்கி அதன் மேம்பாட்டிற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தமிழகத்திலிருந்த கான சபாக்கள் அனைத்தும் தெலுங்கர்களின் பரிபாலனத்திலேயே இருந்தன. இசை அனைத்திலும் தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டன. தமிழில் பாடல்கள் இசைப்பதற்கு தடைவிதிக்கப்ட்டிருந்தது. தமிழ் இசை படிப்படியாக மறைக்கப்பட்டது. தமிழ் வித்துவான்கள் கூட தெலுங்கில் பாடி தமது திறமைகளுக்குப் பாராட்டுப் பெறுவதிலேயே முனைப்பான அக்கறை செலுத்தினார்கள். தமிழில் பாடல் இசைப்பது இழிவாகவும் தீட்டாகவும் தமிழர்களாலேயே கருதப்பட்டது.
இந்தப் பண்பாட்டுச் சூறையாடலிலிருந்து தமிழிசையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ் இசையை முழுiயாக மீளக்கொணர்வதற்கு சாதகமானதும் சாத்தியமானதுமான நமது நாட்டிலேயே உள்ளது. இங்கு தெலுங்கு மொழி பேசுபவர்கள் எவருமில்லை, கான சபாக்களுமில்லை. உலகில் முதல்முதலாகத் தமிழ்மொழிக் கல்வி பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது நம் நாட்டிலேயாகும். இதனை அடியொற்றி தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு வடிவமான, முத்தமிழில் இரண்டாவது கூறான இசைத்தமிழை மீட்டெடுப்பதற்கும் நிலைபெறச் செய்வதற்கும், உலகெங்கணும் வியாபிதமடையச் செய்வதற்கும் மிகவும் உகந்த புலம் ஈழத்திருநாடேயாகும்.
தெலுங்கு மொழி உட்பட அனைத்து மொழிகளையும் அவற்றின் பண்பாட்டுப் பொக்கிசங்களையும் நாம் உயர்வாக போற்றி மதிக்கின்றோம் இசைக் கலைஞர்கள், குறித்த மொழிகளை அறிந்தவர்கள் மத்தியிலேயே அம்மொழிப்பாடல்களை பாடவேண்டும்; நாம் அறியாத மொழிகளில் பாடப்படும் பாடல்கள் செவிநுகர்வில் அதிர்வுகளை மட்டுமே ஏற்படுத்தும். பொருள் விளங்கிச் சுகிக்கும் அனுபவத்தை பூரணமாக இல்லாதொழிக்கும்.
நமது இசைக்கலைஞர்கள், தமிழ் இசையைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து இல்லாதொழிக்க முயன்ற கர்நாடக தெலுங்குக் கீhத்தனைகளை நம்மவர்கள் மத்தியில் பாடுவதும் அவற்றை நம்மவர்களுக்கு பயிற்றுவிப்பதும் அபத்தமானது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை அவமதிப்பதுமாகும். ஈழத்து இசை அரங்குகளில் தமிழ் இசை மட்டுமே பாடப்பட வேண்டும். இயற்தமிழையும் நாடகத் தமிழையும் பேணிவரும் தமிழ்ச் சங்கங்களும் கழகங்களும் இசைத் தமிழையும் பேண ஆவன செய்யவேண்டும். இதேபோன்று நமக்கு முன்னால் பிறிதொரு தேவைப்பாடும் உள்ளது.
ஓரே மொழியினைப் பேசும் மக்கள் வௌ;வேறு நாடுகளில் வாழுகின்ற போதிலும் அந்தந்த நாடுகளுக்கென தனித்துவமான தேசிய அடையாளங்களைப் பேணிவருகின்றனர். ஆங்கில மொழி இங்கிலாந்தைத் தனது தாயகமாகக் கொண்டுள்ளபோதும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் மொழியாகவும் திகழ்கின்றது. இந்நாடுகள் அனைத்தும் ஆங்கில மொழிக்குரிய பொதுவான பண்பாட்டு அம்சங்களுடன் ஒவ்வொரு நாட்டிற்குமரிய தனித்துவமான தேசியப் பண்புகளையும் கொண்டுள்ளன.
தமிழகத்திலும் ஈழத்திருநாட்டிலும் ஒன்றுபட்டு வாழும் நாங்கள் வாழிடங்களால் வேறுபட்டவர்களாக இருக்கின்றோம். தனித்தனியான இறைமைகளைக் கொண்ட இரண்டு நாடுகளில் வாழுகின்றோம். முத்தமிழைப் பொறுத்தமட்டில் இயற் தமிழில் தேசிய தமிழ் இலக்கியத்தை 'ஈழத்தமிழ் இலக்கியத்தை" உருவாக்குவதில் முற்போக்குச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பெரு வெற்றி பெற்றுள்ளார்கள். நாடகத் தமிழிலும் ஈழத்தமிழ் நாடகத்திற்கென்று தனியான தேசிய மரபொன்றைத் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் முறையாகப் பேணிவருகின்றனர். ஆனால் இசைத்தமிழைப் பொறுத்தவரை ஈழத் தமிழிசை வெற்றிடம் நிரப்பபட வேண்டியதாக உள்ளது.
தமிழகத்தின் தமிழிசை மரபுகளும் உன்னதங்களும் உள்ளீடு செய்யப்பட்ட ஈழத் தமிழிசை உருவாக்கப்பட வேண்டும். இது உலகத் தமிழிசையின் தனித்துவமான கூறாகப் பரிணாமம் பெறவேண்டும்.
அற்புதமான இசைக் கலைஞர்களான ஏ.கே.கருணாகரன், எஸ்.பத்மலிங்கம், சண்முகராகவன், திலகநாயகம்போல், கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட ஏனைய இசைக் கலைஞர்களும், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவு, விபுலானந்தர் இசை நடனக் கல்லு}ரி,வடஇலங்கை சங்கீத சபை என்பவை உள்ளிட் நிறுவனங்களும், கொழும்புத் தமிழ்ச்சங்கம், இலங்கைக் கம்பன் கழகம், ஆகியவை உள்ளிட்ட அமைப்புகளும், பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் எஸ்.கே.மகேஸ்வரன் போன்ற கல்விமான்களும், பல்லவி இசை நடன இதழின் நிர்வாக ஆசிரியரும் அற்புதமான தமிழ்க் கீர்த்தன மாலையை இயற்றிய சட்டத்தரணி எஸ்.செந்தில்நாதன் போன்ற அறிஞர்களும் இப்பணிகளை ஆரம்பித்து வைக்கலாம்.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்ள வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் இந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படவேண்டிய அவசர பணியாக இவை கொள்ளப்பட வேண்டும். கல்வி மற்றும் கலாச்சார அமைப்புகளும் தமிழ் அமைச்சர்களும் கலை பண்பாட்டுக் கழகங்களும் இசைக் கலைஞர்களும் ஆர்வலர்களும் தமிழ் உணர்வு மிக்க அனைவரும் இவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தமது இதயபூர்வமான ஆதரவையும் பங்களிப்பையும் நல்கவேண்டும்.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Apr 2024 18:36
TamilNet
HASH(0x556cc0fe0950)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Apr 2024 17:42


புதினம்
Tue, 16 Apr 2024 17:42
     இதுவரை:  24772846 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2096 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com